தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் வென்ற தோடர் பழங்குடி மாணவி.. முதல் முயற்சிலேயே சாதித்தது எப்படி? - toda tribe

மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்வதே தனது லட்சியம் என நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற நீலகிரி தோடர் பழங்குடி இன மாணவி நீத்து சென் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற நீலகிரி தோடர் பழங்குடி இன மாணவி
நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற நீலகிரி தோடர் பழங்குடி இன மாணவி

By

Published : Jun 18, 2023, 9:48 PM IST

நீட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்ற நீலகிரி தோடர் பழங்குடி இன மாணவி

நீலகிரி:உதகை அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வசிக்கும் நார் சோர் குட்டன் - நித்யா தம்பதியரின் மகள் நீத்து சென் (வயது 18). இவர் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற நீட் தேர்வை எழுதி முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் நீத்து சென் வெற்றி பெற்று, தோடர் பழங்குடியின மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அந்த மாணவிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசி வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இது குறித்து மாணவி நீத்து சென் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் தேர்வில் வெற்றி பெறுவதையே இலக்காக வைத்துப் படித்ததால், தற்போது அது நிறைவேறி உள்ளது எனக் கூறினார்.

மேலும், தனக்கு உறுதுணையாக இருந்த தாய், தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக கூறிய அவர், “வரும் காலங்களில் தங்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் படித்து அவர்கள் நினைக்கும் பதவியை அடைய வேண்டும். அதற்குப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். அதேபோல், மருத்துவராகி பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே சிறு வயது முதலான தனது ஆசை என்றும் தற்போது அது நிறைவேறி உள்ளது என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் விபரீத முடிவினை எந்த மாணவ மாணவியரும் எடுக்க வேண்டாம் என்றும் முயற்சி செய்தால் நிச்சையமாக வெற்றி கிடைக்கும் எனவும் நீத்து சென்னின் தாய் நித்யா தெரிவித்தார். தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வு எழுதி முதல் முயற்சியில் வெற்றி பெற்ற தோடர் பழங்குடியின மாணவியின் இத்தகைய கடின முயற்சி, மருத்துவ கனவுகளோடு படிப்பில் ஆர்வம் கொண்டுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மேலும் பழங்குடியின தோடர் இன மக்கள் நீத்து சென்னுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது சகோதரிகள் தாங்களும் நீத்து அக்காவைப் போல் மருத்துவ படிப்பு மேற்கொள்ளப் போவதாகவும், எங்களுக்கு முன்னோடி நீத்து அக்கா தான் எனவும் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசு மருத்துவக் கல்லூரியில் நீத்து பயின்றால் ஐந்து ஆண்டுகள் படிப்புக்காக ஆகும் அனைத்து செலவுகளையும் திமுக ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களும் நாள்தோறும் நீத்துவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இது நீத்துவிற்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்ல, தங்கள் சமுதாயத்தின் சாதனை எனப் பழங்குடி தோடர் இன மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:சேலத்தில் 60 வயதிலும் அசத்தும் பெண் புகைப்பட கலைஞர்!

ABOUT THE AUTHOR

...view details