நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவ்வாறு வரும் காட்டெருமைகள் பொதுமக்களை தாக்கி வருகிறது. இதில் சிலர் உயிரிழந்ததுடன் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காட்டெருமை தாக்கியதில் முதியவர் காயம் - முதியவர்
நீலகிரி: குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
senior citizen injuried
இந்நிலையில் குன்னூர் அருகே குன்னக்கொம்பை மணியாபுரம் பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணி செய்துக் கொண்டிருந்த முதியவரை பின்புறமாக வந்த காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த முதியவருக்கு தற்போது குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.