மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
அரிய வகை மரக்கன்றுகள் நடவு
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
அரிய வகை மரக்கன்றுகள் நடவு
இதில் அரிய வகை மரங்களான விக்கி, சம்பங்கி, நாவல், கோலி உள்ளிட்ட பல்வேறு அரிய சோலை வகை மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், குன்னூரில் பாழடைந்து கிடந்த காந்தி மண்டபம் பொலிவுபடுத்தப்பட்டு அதன் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டக் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமை வகித்து இந்த மரக்கன்றுகளை நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்வதுடன் பேரிடர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் நீலகிரிக்கு உரிய புல் வகைகளும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.