தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் குன்னூர் நெடுஞ்சாலையில் மண்சரிவு...! - நீலகிரி

குன்னூர்: நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

நீலகிரி

By

Published : Aug 10, 2019, 8:27 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மரங்களும், பாறைகளும் நெடுஞ்சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், சரியும் நிலையில் உள்ள மரங்களையும் பாறைகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர் மழையால் குன்னூர் நெடுஞ்சாலையில் மண்சரிவு

ABOUT THE AUTHOR

...view details