தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூண்டில் சிக்கிய கரடி.. பொதுமக்கள் நிம்மதி - People are happy in the nilgiris

கோத்தகிரி அருகே தெருக்களில் சுற்றி வந்த கரடி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கூண்டில் சிக்கிய கரடி.. பொதுமக்கள் மகிழ்ச்சி
கூண்டில் சிக்கிய கரடி.. பொதுமக்கள் மகிழ்ச்சி

By

Published : Aug 19, 2022, 7:18 AM IST

நீலகிரிமாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிலட்டி கிராமத்தில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இதில் இரண்டு கரடிகள் சிக்கிய நிலையில், ஒரு கரடி மட்டும் கூண்டில் சிக்காமல் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றத் தொடங்கியது.

கூண்டில் சிக்கிய கரடி.. பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் கூக்கல் கிராமத்தில் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்தனர். இதில் விடியற்காலையில் கரடி கூண்டில் சிக்கியது. சிக்கிய கரடியை முதுமலை பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.

வெகு நாட்களாக வனவிலங்குகளில் நடமாட்டத்தால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள், தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:8 வயது யானையை தேடும் பணியில் 11 வனத்துறை குழுக்கள்

ABOUT THE AUTHOR

...view details