தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கேத்தி பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் கட்டுமானங்களை தடுக்க வேண்டும்’ - யானை ராஜேந்திரன் - latest nilgiri district news

நீலகிரி: கேத்தி பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலரும், வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யானை ராஜேந்திரன் பேட்டி

By

Published : Oct 12, 2019, 11:53 AM IST

சமீப காலமாகவே நீலகிரி வனப்பகுதி, தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றை அழித்துக் கட்டடங்கள் கட்டப்படுவதை எதிர்த்து, இயற்கை ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் 2009ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து நீலகிரியில் கட்டடங்கள் கட்ட சில வழிமுறைகளைப் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு அதிகமாக கட்டடங்கள் உருவாகியு்ள்ளன. மேலும், நீதிமன்றம் உத்தரவால் சீல் வைக்கப்பட்ட கட்டடங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டார்.

இயற்கை ஆர்வலர் ராஜேந்திரன் பேட்டி

பின்பு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நீலகிரி பாறைகள் உடைக்கத் துணைபோகும் அலுவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். உலகின் இரண்டாவது பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் உதகையில் காணாமல் போன பார்னல் ஏரியை மீட்டெடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படியுங்க:

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த யானை இனி நம்மிடம் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details