நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரியவகை மரங்களான நூற்றாண்டு பழமை வாய்ந்த காகித மரம், ருத்திராட்சை மரம், யானைக்கால் மரம், யூக்கலிப்டஸ் மரம் உளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இம்மரங்களில் வெளிநாடு, உள்நாட்டு அரிய வகை பறவையினங்கள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்வதுடன், கூடுகட்டியும் வாழ்ந்து வருகின்றன.
குன்னூரில் அரிய வகை பறவை இனங்கள்!
நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பறவை இனங்கள் இனப்பெருக்கத்திற்காக வருகை தருகின்றன.
இதில் அரிய வகை பறவையான இமாலயன் பிளாக் லார்டு டிட் என்ற பறவை தற்போது சிம்ஸ் பூங்காவில் இனப்பெருக்கத்திற்காக கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிகின்றன. மேலும் கரோனா ஊரடங்கினால் பூங்காவில் மனிதர்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதாலும், மாவட்டத்தின் சீதோசன நிலை பறவைகளுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளதாலும், இங்கு அரிய வகை பறவையினங்கள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிகின்றன. இவைகளின் இனப்பெருக்க காலம் மூன்று மாதங்களாகும். தற்போது புகைப்பட கலைஞர்களும், பறவை ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!