தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரம்புட்டான் பழ விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி: ரம்புட்டான் பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரம்புட்டான்

By

Published : Jul 11, 2019, 3:12 PM IST

ரம்புட்டான் பழம் இனிப்பு, புளிப்பு கலந்த வித்தியாசமான சுவை கொண்டதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. புரோட்டீன், அதிகளவிலான நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களைக் கொண்டது.

ரம்புட்டான் பழத்தின் தாயகம் இந்தியா என்றாலும் மலேசியா, கம்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஈகுவடார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

ரம்புட்டான் பழ விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை சீசனாகக் கொண்ட ரம்புட்டான் பழம் தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகமாக விளைச்சல் பெற்றுள்ளது. மேலும், ஒரு கிலோ ரம்புட்டான் ரூ 300-க்கு விற்பனை செய்யப்படுவதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இந்தப் பழ விளைச்சலை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details