நீலகிரி மாவட்டம் குன்னூர் தூதூர்மட்டம் பகுதியில் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வீடுகள், வாழைமரங்கள், மேரக்காய், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்டவற்றை சின்னாபின்னமாக்கியுள்ளன. மேலும், தூதூர் மட்டத்தில் உள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியுள்ளன. இதனால் இரவு முழுவதும் குடியிருப்புவாசிகள் பயத்துடனே உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
யானைகளைக் காட்டுக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை - request
நீலகிரி: விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
யானை
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘காட்டு யானைகள் வாழ்வாதாரம் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருவது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் இதுவரை அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் இரவு முழுவதும் குடியிருப்புவாசிகள் பயத்துடனேயே உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, அரசு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட உதவ வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்தனர்.