நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மலைப்பாதையில் உள்ள சாலையோரங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக உயரமான பகுதியில் இருந்து சிறிய, பெரிய அளவிலான கற்கள் உருண்டு வந்து சாலையில் விழுந்துள்ளன. பெரும்பாலான பாறைகள் மண்சரிவில் தொங்கியவாறு உள்ளது.
நீலகிரியில் ஏற்பட்ட மண்சரிவு இதுவரை அந்தப்பாறைகள் அகற்றப்படாமல் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் அந்தப்பாறைகளும் விழுந்துவிடும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தங்களது வாகனத்தை இயக்கி வருகின்றனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள அபாயகரமான பாறைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கொசு உற்பத்திக்கு காரணமான சொமெட்டோ - அதிரடி காட்டிய சுகாதாரத் துறை!