தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே.2) நடைபெற உள்ளது. அதனடிப்படையில், உதகை, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதனிடையே மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வாக்கு எண்ணிக்கைக்காக 775 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து பணியாளர்களுக்கும், தேர்தல் முகவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, நெகடிவ் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம், பட்டாசு வெடிப்புக்குத் தடை
தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தொண்டர் ஊர்வலம், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நடைவடிக்கைக்கு அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தடை விதித்துள்ளார்.
நாளை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சியினர் ஊர்வலம், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் நடிவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பொது இடங்களில் முகாந்திரம் இல்லாமல் நடமாடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கடந்த 25 நாள்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 13 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!