நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்தது. இந்நிலையில், தேவாலா, பந்தலூர் பகுதிகளில் நேற்றிரவு (ஆகஸ்ட் 11) கனமழை பெய்தது.
இதில் புளியம்பாறை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், கோழி கொல்லி, கத்தரி தோடு கிராமத்தில் உள்ள 200 குடும்பங்கள் போக்குவரத்து இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், தேவாலா பகுதியில் இருந்து கரிய சோலை செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.