நீலகிரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுப் பல காலங்கள் ஆன நிலையிலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் நெகிழி பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அதைச் சாலையோரங்கள், கிராமப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் வீசுவதால் சுகாதாரச் சீர்கேடும், சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது.
நெகிழியால் வடிவமைத்த ஆடை அலங்கார போட்டி
நீலகிரி: உதகையில் நெகிழி ஒழிப்புக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெகிழியால் வடிவமைக்கப்பட்ட உடைகளை உடுத்தி பள்ளி மாணவிகள் ஆடை அலங்காரப் போட்டி நடத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
நெகிழியால் வடிவமைத்த ஆடை அலங்கார போட்டி
இந்நிலையில் உதகையிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நெகிழியால் வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து ஆடை அலங்காரப் போட்டியில் பங்கேற்று பார்வையாளர்களை வியப்படைய வைத்தனர். மேலும் வரும் நாட்களில் நெகிழியைப் பயன்படுத்தக் கூடாது எனவும் விழிப்புணர்வு செய்தனர்.
Last Updated : Jun 22, 2019, 7:37 PM IST