பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் பேரூராட்சி! - nilgiri
நீலகிரி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கோத்தகிரி பேரூராட்சி செயல்படுத்தி வருகிறது.
மரக்கன்றுகள் நடும் பேரூராட்சி
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில், 1000 மரக்கன்றுகள் நடவு செய்ய பேரூரைட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.