தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னதாகவே தொடங்கிய ஆதாம்-ஏவாள் பழ சீசன்! - நீலகிரி செய்திகள்

எப்போதும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் பெர்சிமன் பழ சீசன், இந்தாண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கியுள்ளது.

persimmon fruit  persimmon fruit season  nilgris  nilgris news  nilgris latest news  பெர்சிமன் பழ சீசன்  பெர்சிமன் பழம்  பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்  நீலகிரி செய்திகள்  குன்னூர் சிம்ஸ்
பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்!!!

By

Published : Jun 18, 2021, 10:57 AM IST

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய பழமான மருத்துவ குணம் கொண்ட பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் பெர்சிமன் பழ சீசன், இந்தாண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கியுள்ளது. இதனை ஆதாம் ஏவாள் பழம் என்றும் அழைப்பார்கள்.

இந்தப் பழம் வைட்டமின் ஏ, சி (vitamin A, C) சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. இப்பழத்தினை எத்தனால் (ethanol) என்னும் திரவத்தில் ஊறவைத்து கழுவிய பிறகே உட்கொள்ள வேண்டும்.

ஜூலை, ஆகஸ்டில் அதிகளவில் இப்பழங்களின் சாகுபடி அதிகரிக்கும் என்றும் இப்பழங்களைப் பெற முன்பதிவும் அறிவிக்கப்படும் எனவும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'சூப்பர் டா தம்பி' வாழ்த்தும் அசுரனின் அண்ணன்கள் !

ABOUT THE AUTHOR

...view details