தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 15, 2023, 10:48 PM IST

ETV Bharat / state

தோகை விரித்து ஆடிய மயில் - கண்டு ரசித்த வாகன ஓட்டிகள்

நீலகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியதை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்துச் சென்றனர்.

Etv Bharat சாலையில் தோகை விரித்து ஆடிய மயில்
Etv Bharat சாலையில் தோகை விரித்து ஆடிய மயில்

சாலையில் தோகை விரித்து ஆடிய மயில்

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இதனால், யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பகல் நேரங்களிலேயே சர்வசாதரணமாக சாலையோரம் உலா வருவதை காணலாம். மேலும், சமவெளி பகுதியில் மட்டுமே உள்ள நம் நாட்டின் தேசிய பறவையான மயில் இந்த சாலையில் தனது நீண்ட தோகையை விரித்தபடி குன்னூர் சாலை ஓரத்தில் நடமாடியது.

அப்போது, அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு மயிலை பரவசத்துடன் கண்டு ரசிக்க தொடங்கினர். இதனால், உற்சாகமடைந்த பயணிகள் பலரும் தங்களது செல்போன்களில் மயிலை படம் பிடித்ததுடன் அதற்கு முன்பாக நின்று செல்பி எடுத்துச் சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் நடமாடிய மயில் பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.

இதையும் படிங்க:சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்த 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

ABOUT THE AUTHOR

...view details