தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெலிங்டன் ராணுவ முகாமில் 502 வீரர்கள் சத்தியப் பிரமாணம்..!

நீலகிரி: குன்னூர் ராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்த 502 வீரர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு, நாட்டின் எல்லை பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

wellington-cantonment
wellington-cantonment

By

Published : Dec 7, 2019, 2:30 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார், வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்களுக்கும் பணிபுரிய அனுப்பப்படுகின்றனர்.

இந்த முகாமில் கடந்த 46 வாரங்களாக பயிற்சி பெற்ற, 502 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி இன்று வெலிங்டன் பேரக்ஸில் நடைபெற்றது. பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது ராணுவ வீரர்கள், சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

புதிய வீரர்கள் அணிவகுப்பு

தொடர்ந்து வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, ராணுவ மைய தலைவரான ஆர்.எஸ்.குரையா வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'நாட்டின் எல்லையைக் காக்கும் பணிக்குச் செல்லும் வீரர்கள், தேச நலனை கருத்தில்கொண்டு, சிறப்பாக பணியாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக, அணிவகுத்து வந்ததைக் கண்டு பெருமிதம் அடைந்தனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய, நான்கு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க...

கேரள வங்கி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன்!

ABOUT THE AUTHOR

...view details