நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 30 அரசு மதுபான கடைகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு மதுபான கடையை மூடுங்கள் - எங்களால் நிம்மதியாக வாழ முயடில..!
நீலகிரி: பில்லிகம்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை மூடக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்து வந்த அவர்கள், பில்லிகம்பை கிராமத்தில் பள்ளி, கோயில், ரேசன் கடை ஆகியவற்றின் அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும், இந்தக் கடையானது பொதுமக்கள் கூடும் மையப்பகுதியில் அமைந்துள்ளதாகவும், அங்கு மது அருந்துபவர்கள் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்வதாகவும், இதனால் பெண்களும், மாணவர்களும் அந்த வழியாக சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே அந்தக் கடையை மூட வலியுறுத்தி பலமுறை அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கபட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.