நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை, நிலச்சரிவால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 10ஆம் தேதி உதகை மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உதகை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் உதகமண்டல மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
விரைவில் நீலகிரியில் நடத்தப்படயிருக்கும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு!
நீலகிரி :உதகமண்டலத்தில் பெய்து வந்த கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை, வரும் 25ஆம் தேதி நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
ooty to get back its tnpsc exam
இந்நிலையில் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வானது, அதே தேர்வு மையத்தில் வரும் 25ம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை, உதகை தேர்வுமைய விண்ணப்பதாரர்கள் மட்டும், தேர்வாணைய இணைய தளத்திலிருந்து www.tnpscexams.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.