நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பெய்த கனமழையால் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதனால், வீடுகளை இழந்த மக்கள் பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.
"ஒரு தலைமை ஆசிரியரா இப்படி?" - வைரலாகும் வீடியோ! - head master
நீலகிரி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டிய நிவாரணப் பொருட்களை தலைமை ஆசிரியர் திருடிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி அரசுத் தொடக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக ஒரு அறையில் நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த நிவாரணப் பொருட்களை யாருக்கும் தெரியாமல், தனது காரில் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, கேள்வி கேட்ட மக்களை தரைக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. தலைமையாசிரியரிடம் இதுதொடர்பாக பேசும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய நிவாரணப் பொருட்களை ஒரு தலைமை ஆசிரியர் திருடிச் சென்றதால், அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.