தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருணாநிதியின் மகனா என யோசிக்கும் அளவுக்கு நிதானம் இழந்துபேசும் ஸ்டாலின்!' - pongal festival

நீலகிரி: திமுக தலைவர் ஸ்டாலின் நிதானம் இழந்து பேசுவதாகவும், கருணாநிதி போன்று பேசுவதில்லை என்றும் கருணாநிதியின் மகனா என அனைவரையும் யோசிக்கும் அளவிற்கு அவரது பேச்சு இருப்பதாகவும் பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.

ராதாரவி
ராதாரவி

By

Published : Jan 9, 2021, 4:22 PM IST

உதகை பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி கலந்துகொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, "திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முறையாக தலைவர் பொறுப்பிலிருந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளார். ஆனால் எங்கு சென்று பேசினாலும் நிதானம் இழந்து பேசுகிறார். கருணாநிதியைப் போன்று பேசுவதில்லை. அவர் கருணாநிதியின் மகனா என அனைவரையும் யோசிக்கும் அளவிற்குப் பேசுகிறார்.

பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி செய்தியாளர் சந்திப்பு

ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வரவில்லையென்றாலும் பாஜகவிற்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ரஜினியின் நியூமாரலஜியின்படி பல பேரிடம் கருத்து கேட்பார். ஆனால் இறுதி முடிவு அவரே எடுப்பார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியைப் பொறுத்தவரையில் அதிமுகவே தலைமை வகிக்கும். இன்னும் 50 ஆண்டு காலமானாலும் இரட்டை இலை சின்னத்தை யாராலும் அழிக்க முடியாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details