நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் சரணாலயம் 660 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும் . இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. கடந்த 15 நாட்களாக பெய்த கன மழையால் வன பகுதியில் பசுமை திரும்பியுள்ளது.
பசுமை திரும்பிய முதுமலை சரணாலயம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - சுற்றுலா
மழை பெய்து முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தில் பசுமை திரும்பியுள்ளதால் வன விலங்குகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர்.
இதற்கு முன் வறட்சி காரணமாக முதுமலையில் இருந்து இடம்பெயர்ந்த வன விலங்குகள் தற்போது அதே பகுதிக்கு மீண்டும் வரத் துவங்கியுள்ளன. இதனால் சாலை ஓரங்களில் காணப்படும் வன விலங்குகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யானை சவாரி, வாகன சவாரி மூலம் வன பகுதிக்குள் சென்று வன விலங்குகளை பார்த்தும் ரசிக்கின்றனர். எனினும் சாலை ஓரங்களில் உள்ள வன விலங்குகளை கண்டு வாகனத்தில் இருந்து இறங்கவோ, அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.