கடந்த 2006ஆம் ஆண்டு முதுமலைக்கு உட்பட்ட கார்குடி வனத்திலிருந்து மூன்று மாத குட்டியான மசினி, தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு மசினி யானைக்கு 9 வயது நிரம்பிய போது, சமயபுரம் கோயிலுக்கு ஆன்மீக பணிகள் ஆற்றச் சென்றது.
அங்கு அதிகமான சப்தம், அதிக மக்கள் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டுபோனது. இதில் ஆத்திரம் அடைந்த மசினி யானை கோயிலில் தன்னை பராமரித்த பாகனையே மிதித்து கொன்றது. இதனால் மசினி யானைக்கு ஒரத்தநாடு கால்நடை பல்கலைகழகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த மிசினி யானை! இதனையடுத்து மசினி யானையை முதுமலைக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால் நான்கு ஆண்டுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் மசினி யானை, தனது தாய்வீடான முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது.
மீண்டும் தாய் வீட்டுக்கு வந்த மிசினி யானை! மசினி முதுமலை வரும்போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில், தற்போது முதுமலையின் இயற்கையே அவற்றை குணப்படுத்தியுள்ளது. இங்கு வரும்போது 1900 கிலோ எடையில் இருந்த மசினி, 6 மாதத்தில் மட்டும் 500 கிலோ எடை கூடியுள்ளது. தற்போது உற்சாகமாக மேய்ச்சலில் ஈடுபடுகிறது.