கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
மேலும், வன விலங்குகளைக் காண ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள், முதுமலைக்கு உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்லும்போது அங்குள்ள அருவியின் அழகைக் காணவும் செல்கின்றனர்.
வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்குச் செல்ல நடைபாதை இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் முற்களுக்கு நடுவே நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்கையில், வழுக்கும் பாறைகளின்மீதுஅத்துமீறி ஏறி புகைப்படம் எடுத்துவருகின்றனர்.
பாறைகளிலிருந்து கீழே விழுந்து பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத் துறையினர் அறிந்தும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பிற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.