தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட்டில் ஈடுபட்ட நகை கடை ஊழியர் கைது! - உதகை செய்திகள்

நீலகிரி: உதகையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகளை மாற்றி திருட்டில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ooty jewelry store theft
ooty jewelry store theft

By

Published : Oct 17, 2020, 3:12 PM IST

உதகை கமர்சியல் சாலையில் செம்மனூர் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டம் சகுந்தலை பகுதியை சேர்ந்த கணபதி (29) என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக நிர்வாகம் ஆடகுறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், இவர் கடந்த 6 மாதங்களாக விற்பனை, பண பரிவர்த்தனை ஆகியவற்றை கவனித்து வந்துள்ளார்.

அப்போது, நகைகளை வாங்க வருபவர்கள் கொண்டுவரும் பழைய நகைகளை மாற்றி புது நகைகளை விற்பனை செய்யும் போது கணபதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பழைய நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகள் வைத்தல், எடை குறைத்து காட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பழைய தங்க நகைகளை திருடி சென்றாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பழைய நகைகளை புது நகைகளாக மாற்ற கோவையில் உள்ள இவர்களது மெயின் பிரான்சிற்கு பழைய நகைகளை கொண்டுச் செல்ல வந்த கடை ஊழியர்கள் நகைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது சோதனையில் 400 கிராம் எடை நகை குறைந்துள்ளது. நகை கொண்டு செல்ல ஊழியர்கள் வருவதை அறிந்த கணபதி, யாருக்கு தெரியாமல், முன் அனுமதி பெறாமல் தனது சொந்த ஊருக்கு சென்றுதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கணபதியிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, செம்மனூர் ஜூவல்லரி மேலாளர் ஜிபில் ஜார்ஜ் உதகை பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை தொடர்ந்து ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர்.

அப்போது சந்தோகத்தின் பெயரில் கணபதி சொந்த ஊருக்கு தனிபடை காவல்துறையினர் சென்று மேற்கொண்ட விசாரணையில், கணபதி தான் திருட்டில் ஈடுப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், கணபதி என்பவர் விற்பனை, பண பரிவர்த்தனையும் கவனத்து வந்துள்ளார். அப்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகளை மாற்றி, போலி நகைகளை வைத்துள்ளார். விசாரணையில் அதனை அவர் ஒப்பக் கொண்டார். மேலும், இதில் பாதி நகைகளை அவரது சொந்த ஊரில் விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தற்போது கணபதி, கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளார். இதில் வேறு யாருக்காவது தொடர்ப்பு இருகிறாதா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்”. என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details