நீலகிரி மாவட்டம், ஊட்டி மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் கண்டு ரசிக்கும் வகையில் நேற்று (மே.20) வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அதனை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று (மே.21) அவர், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் கணேஷ், பொன்.ஜெயசீலன் ஆகியோருடன் மலர் அலங்காரங்களை பார்வையிட்டனர்.
இணைய தள வழியில் ஊட்டி மலர்க் கண்காட்சி பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது, "தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சிக்கான 293 ரகங்களைச் சேர்ந்த 5 லட்சம் செடிகள் நடவு செய்யப்பட்டதோடு, 25 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது.
இதை ஆன்லைனில் பார்வையிட வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து