தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரேஞ்சா மலர் சாகுபடியில் அசத்தும் உதகை விவசாயிகள் - உதகை விவசாயிகள் அசத்தல் முயற்சி

நீலகிரி: கென்யா, ஹாலந்து போன்ற நாடுகளின் வளரும் ஹைட்ரேஞ்சா மலர்களை உதகையில் சாகுபடி செய்து அப்பகுதி விவசாயிகள் வருமானம் ஈட்டிவருகின்றனர்.

மலர் சாகுபடியில் அசத்தும் உதகை விவசாயிகள்
மலர் சாகுபடியில் அசத்தும் உதகை விவசாயிகள்

By

Published : Dec 30, 2020, 6:22 PM IST

கென்யா, ஹாலந்து ஆகிய நாடுகளில் மட்டுமே வளரக்கூடிய ஹைட்ரேஞ்சா மலர்களை இந்தியாவிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளனர், நீலகிரி விவசாயிகள்.

இதன் சிறப்பு

இந்தச் செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு உள்ளிட்ட மூன்று நிறங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை அதிகம் பேர் விரும்புவதால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

கொய்மலர்

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு மாற்றுப்பயிராக கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. உதகை, கோத்தகிரி பகுதிகளில் அதிக அளவில் கொய்மலர்கள் பசுமை குடில்களில் பயிரிடப்பட்டுள்ளன.

கார்னீசியன், ஜர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த மலர்களின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அலங்காரத்திற்கு ஏற்ற மலர்

நட்சத்திர ஹோட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அலங்காராம் செய்ய ஹைட்ரேஞ்சா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு மலருக்கு 400 ரூபாய்வரை பணம் கொடுக்கப்படுகிறது. கோத்தகிரி பகுதியில் இது பயிரிடப்பட்டுள்ளது.

ஹைட்ரேஞ்சா செடிகள் வளர ஏற்ற கால நிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இம்மலர்கள் சாகுபடி செய்யபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மலர் சாகுபடியில் அசத்தும் உதகை விவசாயிகள்

ஹைட்ரேஞ்சா மலர்

இவற்றை ஒரு முறை பயிரிட்டால் 20 ஆண்டுகள்வரை மலர்களை பறிக்க முடியும். ஒரு மலருக்கு 100 முதல் 150 ரூபாய்வரை விலை கிடைப்பதாகவும், ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா உள்ளிட்ட 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பூத்தது பூ ஒன்று: சேலத்தில் இரவில் மலர்ந்த அரியவகை பூ!

ABOUT THE AUTHOR

...view details