தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளத்தில் கவிழ்ந்த கார்: ஒருவர் பலி, இருவர் படுகாயம்!

நீலகிரி: உதகையில் இருந்து கூடலூர் வழியாக கேரளா சென்ற சொகுசு வாகனம், மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகையில் விபத்து

By

Published : Aug 3, 2019, 4:00 PM IST

Updated : Aug 3, 2019, 6:15 PM IST

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், தங்களின் புதிய சொகுசு வாகனத்தில் நேற்று உதகைக்குச் சுற்றுலா வந்தனர். அதில் மூன்று பேர் பயணித்திருந்த நிலையில், உதகையைச் சுற்றிப் பார்த்த அவர்கள், இன்று சொந்த ஊரான மலப்புரத்திற்கு, கூடலூர் வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

விபத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி!

இந்நிலையில், மேல் கூடலூர் பகுதியில், கொண்டை ஊசி வளைவில் திரும்புகையில், இவர்களின் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மூன்று பேரில், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், அக்ரம் முகமது என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவரும், கூடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last Updated : Aug 3, 2019, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details