தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டெருமைத் தாக்கி மூதாட்டி படுகாயம்! - NILGIRI

நீலகிரி: குன்னூரை அடுத்த கோலனி மட்டம் கிராமத்தில் காட்டெருமைத் தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார்.

நீலகிரி, NILGIRI, CUNNOOR
காட்டெருமைத் தாக்கி மூதாட்டி படுகாயம்

By

Published : Apr 26, 2021, 6:13 AM IST

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிமாக உள்ளது. உணவு, தண்ணீருக்காக கிராமப் பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகள் மனிதர்களைத் தாக்கிவருகிறது. இதில் குன்னூர் பகுதிகளில் அதிகளவிலான காட்டெருமைகளின் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், குன்னூர் அதிகரட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோலனி மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (65). இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த காட்டெருமை இவரைத் தாக்கியதில் படுகாயமடைந்தார்.

காயமடைந்த மீனாட்சியை 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகமண்டலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். வயிற்றுப் பகுதியில படுகாயமடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: யானைகளின் வழித்தடத்தில் அமைத்த முள்வேலியை அகற்ற கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details