நீலகிரி மாவட்டத்தில் மே 31ஆம் தேதியுடன் கோடை சீசன் நிறைவுபெற்றது. குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போது கோடை சீசன் நிறைவுபெற்று பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், குன்னூர் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது, மற்ற நாட்களில் மழையில்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது.