நீலகிரி: உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் கூடலூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்களை தீயணைப்பு, நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்துவருகின்றனர்.
குறிப்பாக நாடுகாணி - கள்ளிக்கோட்டை சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் மக்கள் அவதி பாண்டியாறு - பொன்னம் புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேன் வயல் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்வதால் பாதுகாப்புக்காக அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழு இன்று (ஜூலை 23) இரவு கூடலூர் விரைகிறது.
கடந்த 10 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு
அவலாஞ்சி 10.2 செ.மீ.
பந்தலூர் 8.7 செ.மீ.
கூடலூர் 5.2 செ.மீ.
நடுவட்டம் 5செ.மீ.
இதையும் படிங்க:17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை