தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை இல்லை - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் வர எந்தத் தடையும் இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா
ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

By

Published : Aug 10, 2021, 2:55 PM IST

நீலகிரி : கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வர கரோனா நெகடீவ் சான்றிதழ் கட்டாயம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ”நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தினந்தோறும் 50க்கும் குறைவானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கேரளா மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ளதால் மாவட்ட எல்லையில் கரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெகடீவ் சான்று இல்லாதவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை எடுக்கப்படுகிறது. இதற்காக வருவாய்த்துறையினருடன் சுகாதாரத் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் வர எந்தத் தடையும் இல்லை.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

தனியார் விடுதிகள், உணவகங்கள், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இனி வரும் நாள்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே வணிக நிறுவனங்களைத் திறக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details