தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரின் உத்தரவால் நீலகிரியில் சர்ச்சை! - inocent divya

நீலகிரி: சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் குப்பை தொட்டிகளை பொருத்தி நெகிழி குப்பைகளை சேகரிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அளித்த உத்தரவு சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

nilgris

By

Published : Jun 4, 2019, 8:06 AM IST

நீலகிரி மாவட்டத்தில் 2002ஆம் ஆண்டு முதல் நெகிழி தடை அமலில் உள்ளது.

இந்தத் தடை முழுவதுமாக கடைப்பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நெகிழி தடையை முழுவதுமாக அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனினும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிக் கழிவுகளை அதிக அளவில் வீசி செல்வதாலும், மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மறைமுகமாக நெகிழி பயன்படுத்தி வருவதாலும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகள், தனியார் மினி பேருந்துகள், சுற்றுலாப் வாகனங்களினுள் குப்பைத் தொட்டிகளை பொறுத்தி நெகிழிக் குப்பைகளை சேகரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்களில் குப்பைத்தொட்டு பொருத்தும் காட்சிகள்

அந்த உத்தரவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர்கள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இது நீலகிரி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிரவன் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய ஐந்தாயிரத்து 78 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் சுற்றுலா வாகனங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details