நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள 7 வார்டுகளில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் காய்ச்சல், சளி போன்ற ஏதேனு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், சிகிச்சைக்காக ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட் மருத்துவமனைக்குச் சென்று வருவது வழக்கம்.
நீலகிரி வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனை மூடல்!
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனை இரண்டாவது முறையாக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
hospital
தற்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து சென்றதாக தகவல் வெளியானது. இதனால், கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனை இரண்டாவது முறையாக மூடப்பட்டது.
இதையும் படிங்க:வெளியானது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் - 92.2 விழுக்காடு தேர்ச்சி