தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை! - நீலகிரி செய்திகள்

நீலகிரி: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை, தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில்
மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில்

By

Published : Dec 10, 2019, 4:52 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக, ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தண்டவாளங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து மீண்டும் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில்

இன்று காலை 7.55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 200 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், காலை 10.45 மணிக்கு குன்னூர் வந்தடைந்தது. மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதை அறியாமல் அப்பகுதிக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள், இதனை அறிந்து உற்சாகத்துடன் ரயிலில் பயணித்தும், முன்பதிவுகள் செய்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க:

பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்

ABOUT THE AUTHOR

...view details