நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடிவருகின்றனர். 14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில் ஜெகதளா, பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இங்கு மட்டுமே கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தினர்.