நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த மழையின் காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, கமராஜர் சாகர், கிளன்மார்கன், மரவகண்டி, போர்த்தி, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட 12 அணைகள் நிரம்பியுள்ளன.
மழையினால் அணைகள் நிரம்பியுள்ளதால் மாவட்டத்தின் பெரிய அணைகளான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானி அணை, 171 அடி உயரம் கொண்ட அவலாஞ்சி ஆகிய அணைகளின் பாதுகாப்பைக் கருதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.