தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருமண அழைப்பிதழ் இருக்கோ இல்லையோ கரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்கணும்'

நீலகிரி: "திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள், கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்து சான்று அளிக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னெசன்ட் திவ்யா பேட்டி
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னெசன்ட் திவ்யா பேட்டி

By

Published : Aug 15, 2020, 3:01 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 996 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அவர்களுள் 902 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் உதகை அருகே நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கரோனா தொற்று பரவியது.

தற்போது ஆடி மாதம் முடிந்துள்ள நிலையில், இனி திருமண நிகழ்ச்சிகள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாவட்ட நிர்வாகம், திருமணம் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து, நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திருமணம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்து சான்று அளிக்க வேண்டும். மேலும் திருமண நிகழ்ச்சிகளில், 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னெசன்ட் திவ்யா பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "திருமணம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:’தேவையற்ற விழாக்களை தவிர்த்து விடுங்கள்’ - நீலகிரி ஆட்சியர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details