தமிழ்நாடு உள்ளிட்ட கேரளா பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்து வந்தது. கேரள மாநிலம் மூணாறு அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 80க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி - munnar landslide deaths
நீலகிரி: மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சேர்ந்த 80 நபர்களுக்கு குன்னூர் பேருந்து நிலையம் அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தன. இதில், காயமடைந்தவர்களுக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு குன்னூர் பேருந்து நிலையம் அருகே கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்சர் எர்த் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்தவர்கள், குன்னூர் வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:மூணாறு நிலச்சரிவு: மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு