நீலகிரி: கூடலூர், பந்தலூர் மசினகுடி, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், நகராட்சி ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில், கூடலூர் வியாபாரி சங்க நிர்வாகிகளுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தீவிரமடையும் கரோனா..கூடலூரில் மீண்டும் முழு ஊரடங்கு! - nilgiris administration
நீலகிரி: கூடலூரில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கூடலூரில் மீண்டும் முழு ஊரடங்கு
அப்போது, ’கரோனா பரவலை கட்டுபடுத்த வியாபாரிக்ள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள், இன்று முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை அனைத்து கடைகளையும் அடைத்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வியாபாரி சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க:ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய நாம் தமிழர் கட்சி!