தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2020, 3:03 PM IST

ETV Bharat / state

ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு? சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

நீலகிரி: குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் கட்டணத்தை உயர்த்திட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால், உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஊட்டி மலை ரயில்
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஊட்டி மலை ரயில்

கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் வரையில், பாரம்பரிய நீராவி இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல், ஊட்டி-குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.

ஊட்டி மலை ரயில்.

இதுவரையிலும் குறைந்த கட்டணமாக ரூபாய் 35 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் 85 ரூபாய் என உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே 150 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை உயர்த்திடவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில், முன்பதிவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் உள்ளூர் பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:தடையை நீக்கிய வனத்துறை - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details