கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில், இன்று மலை ரயில் இன்ஜினில் தண்ணீர் குறைவு ஏற்பட்டது. இதனால் ரயிலின் உந்து சக்தி குறைந்ததால், அதிக அழுத்தம் கொடுத்து ரயிலை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
குன்னூர் மலை ரயிலில் இன்ஜின் கோளாறால் புகைமூட்டம்! - Tourist place
நீலகிரி: குன்னூர் மலை ரயிலில் இன்ஜின் கோளாறு காரணமாக, ரயிலிலிருந்து அதிகளவில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் ரயிலில் பயணித்த குழந்தைகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
nilgiri-mountain-train
இதனால் அதிகளவில் புகைமூட்டம் ஏற்பட்டு, அந்தப் பகுதியே இருளில் மூழ்கியது. மேலும், மலை ரயிலில் பயணம் செய்த குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்பட அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
எனவே, வருங்காலங்களில் மலை ரயிலை சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.