தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் மலை ரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு - தென்னக ரயில்வே

உதகை: தொடர்மழை காரணமாக குன்னூர் - மேட்டுபாளையம் மலை ரயில் டிசம்பர் 7 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Nilgiri Mountain train
Nilgiri Mountain train

By

Published : Dec 4, 2019, 9:38 AM IST

நீலகிாி மாவட்டத்தில் நான்கு நாட்களாக இரவிலும் பகலிலும் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சாிவு நிலச்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் மற்றும் மரங்கள் விழுவதால் தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மலை ரயில் பாதையிலும் மரங்கள் பாறைகளுடன் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குன்னூர் - மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி டிசம்பர் 7 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. குன்னுாா் முதல் ஊட்டி வரை இயங்கும் மலை ரயில் வழக்கம் போல் இயங்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details