தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2020, 12:05 AM IST

ETV Bharat / state

உணவுப் பொருளில் கலப்படம் - உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

நீலகிரி: குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கலப்படம் அதிகமுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

food safty department
food safty department

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதியான தேதி, ரசாயன கலவையுள்ள உணவுப் பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது‌‌. இதேபோன்று சுற்றுலாத் தலங்களில் குழந்தைகள் சாப்பிடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனை

இவ்வாறு தின்பண்டங்கள் உண்பதால் நரம்பு தளர்ச்சி, கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு அலுவலர்கள் ரூபாய் முப்பதாயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்‌.

தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கு ஒத்திவைப்பு!

மேலும், இனி வரும் காலங்களில் கடை வியாபாரிகள் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details