தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஸ்டியர் நிறுவனத்தில் கரோனா பரிசோதனை தொடக்கம் - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி: குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 80 பேர் வீதம் கரோனா பரிசோதனை தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

By

Published : Apr 18, 2020, 3:23 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் 1907ல் நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறிநாய் கடி மருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது ரேபிஸ் நோய் கண்டறியும் மையமாக செயல்படுவதுடன், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், ‘முத்தடுப்பு ஊசி’ மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற, உலகத் தர கட்டுமானம், உள்கட்டமைப்பு பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இந்நிலையில், நீலகிாி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று நிறுவனத்தை ஆய்வு செய்து, அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் கரோனா பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இன்னும் ஒரிரு நாட்களில் இங்கு கரோனா பரிசோதனை தொடங்கப்படும். நாள் ஒன்றுக்கு 80 பேருக்கு இங்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாயைத் தாண்டிய அபராதத் தொகை!

ABOUT THE AUTHOR

...view details