தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பதிவு செய்தால் நீலகிரி வரலாம் - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா! - வடகிழக்கு பருவ மழை

நீலகிரி: இ-பதிவு இருந்தால் மட்டுமே வெளிமாநிலம், வெளிமாவட்டத்தினர் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

By

Published : Nov 3, 2020, 4:01 PM IST

ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று (நவ.3) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், வடகிழக்கு பருவ மழையின் போது கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அதிக மழை பெய்யும், கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் வடகிழக்கு மழைக்கு மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 5, 6 ஆகிய தேதிகளில் குன்னூர், கோத்தகிரி தாலுகாகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.

கன மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டம், வெளிமாநில சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வர விதிக்கபட்டிருந்த இ-பாஸ் நடைமுறையில் ரத்து செய்யபட்டுள்ளது. அதற்கு பதிலாக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வெளிமாநிலம், வெளி மாவட்டத்தினரின் எண்ணிக்கை அறிந்து கொள்ளவே இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள் இணையளத்தில் இ-பதிவு செய்தாலே தானாக அனுமதி கிடைக்கும் விதமாக வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரியில் திருமணத்தை நிறுத்தி பெண்: மாப்பிள்ளை குறித்த ஆடியோ வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details