தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நமது ஊரில் மது கிடையாது” - அசத்தும் இளைஞர்கள்! - paduga youthful association

நீலகிரி: குன்னூர் அருகே படுகர் இன மக்கள் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் மது அருந்தவோ, போதை பொருட்களை பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.

tribles

By

Published : Aug 5, 2019, 5:25 AM IST

போதை மனிதனை அடிமைப்படுத்துவது மட்டும் அல்ல, உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புகைப்படம், படங்கள் மூலமும் மக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்த பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அதனை யாரும் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. ஆனால், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த படுகர் இன மக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

நீலகிரியில் படுகர் இன மக்கள் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கிராமப்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து படுகர் இளைஞர் பேரவை சார்பில் நீலகிரியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் போதைப் பொருட்கள் விற்கவோ, மது வகைகளைப் பயன்படுத்தவோக் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகள் கிராமங்கள் தோறும் அமைத்து வருகின்றனர்.

படுகர் இன மக்களின் சமூக சேவை

இதனை முதன்மைப் படுத்தும் விதமாக குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா கிராமத்தில் கடைகளில் போதைப் பொருட்களை விற்கக் கடாது, திருமணம், பண்டிகை உள்ளிட்ட விழா நேரங்களில் மது வகைகளை பயன்படுத்தக்கடாது என்றும், கந்துவட்டிக்காரர்கள் கிராமத்திற்குள் நுழைய விடக்கடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த படுகர் இளைஞர் பேரவை இதுவரை 11 கிராமங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இன்னும 400க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அறிவிப்பு பலகை வைப்பதற்கான பணிகளை செயல்படுத்தி வருவது அப்பகுதி மக்களை வியப்படைய வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details