அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்ட அமமுக சார்பில் கழக குன்னூர் நகர செயலாளர் சயத் முபாரக் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
நீலகிரியில் அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு நிகழ்ச்சி! - nilgiri ammk meeting local body election
நீலகிரி: நீலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பமனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர்துரை கலந்துகொண்டார். மாவட்ட செயலாளர் கலைசெல்வன், சிறுபான்மை மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பமனுக்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நகர செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார், "இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உள்ள டிடிவி தினகரன் ஆணைப்படி விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுச்சியுடன் நடைபெற்ற விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியே எங்கள் வெற்றிக்கான அறிகுறியாகும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் உன்னதமான வெற்றியை பெறுவோம்" என்று தெரிவித்தார்.