நீலகிரி மாவட்டம் குன்னூரில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்த 74 கடைகளில் 43 கடைகளை வருவாய்த்துறையினர் காவல் துறையினர் உதவியோடு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிதமுள்ள கடைகளும் அகற்றப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தூர்வாரும் பணி நடைபெறயிருப்பதால், ஆற்றின் அருகே உள்ள வீடுகளை அகற்ற கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அவர் வீடுகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.
விரைவில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் வழங்கப்படும் என்றும்; பேருந்து நிலையத்தில் உள்ள மீதமுள்ள ஆக்கிரமிப்பு கடைகளும் பாராபட்சமின்றி விரைவில் அகற்றப்படும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திருமுல்லைவாயலில் ஆந்திர வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி