தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவசமாக முகக்கவசம் வழங்கிவரும் காய்கறி வியாபாரி - Nilagiri Mask High Rate

நீலகிரி: கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை காய்கறி வியாபாரி ஒருவர் இலவசமாக வழங்கி வருகிறார்.

முகக் கவசம் கரோனா முகக் கவசம் முகக் கவசம் விலை உயர்வு இலவச முகக் கவசம் Free Mask Corona Mask Nilagiri Mask High Rate Mask
Mask High Rate

By

Published : Mar 23, 2020, 8:20 PM IST

Updated : Mar 23, 2020, 8:31 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது முகக்கவசங்கள் மருந்து கடைகளில் இருந்தபோதிலும் தட்டுப்பாடு எனக் கூறி மூன்று மடங்கு விலை அதிகமாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக முகக்கவசம் ஒன்றிற்கு 90 ரூபாயும், கிருமிநாசினி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பாமர மக்கள் இதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறியும் மருந்தக உரிமையாளர்கள் தங்களது சுய லாபத்திற்காக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

முகக்கவசம் வழங்கும் காய்கறி வியாபாரி

இந்நிலையில், குன்னூர் காய்கறி வியாபாரி ஒருவர் தனது சொந்த செலவில் ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

அதனைக் காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோருக்கு வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:மருந்து கடைகளில் முகக்கவசங்களின் விலை திடீர் உயர்வு

Last Updated : Mar 23, 2020, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details